• Jul 02 2025

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் - 85 பேர் உயிரிழப்பு!

shanuja / Jul 1st 2025, 2:40 pm
image

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 


காசாவில் இஸ்ரேல்  நேற்று (30) நடத்திய தாக்குதலால்  வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின. 


காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும்  30 பேர் காயமடைந்தனர். 


மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது  நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 


ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பாடசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் காயமடைந்தனர்.


இந்த நிலையில் நேற்று மட்டும் காசாவில்  85 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் வசித்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் - 85 பேர் உயிரிழப்பு காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல்  நேற்று (30) நடத்திய தாக்குதலால்  வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின. காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும்  30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது  நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பாடசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் காயமடைந்தனர்.இந்த நிலையில் நேற்று மட்டும் காசாவில்  85 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் வசித்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement