ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார்.
சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஹிஷாட் பத்யூதின் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.பி பதவியிலிருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முஹம்மது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார். சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஹிஷாட் பத்யூதின் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.