• Apr 19 2026

ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் - ஈரான் முடிவு!

shanu / Mar 23rd 2026, 3:45 pm
image

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், பிரதானமாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.


இதனால் உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை 48 மணித்தியாலத்துக்குள் திறக்கவில்லை என்றால், ஈரானின் மின் கட்டமைப்புகளை தாக்குவோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அதன்படி, ஹோர்முஸ் நீரிணை மீதான தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும்பொருட்டு, குறித்த நீரிணை வழியாக கடந்து செல்லும் கப்பல்களிடம் சுமார் 18 கோடி ரூபா சுங்கக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


“இது ஈரானின் பலத்தை வெளிப்படுத்துகிறது. போர் காரணமாக அதிகரித்துள்ள அரசுச் செலவுகளை சமாளிக்கவும் உதவும். இது ஈரானின் அதிகாரத்தையும் பிரதிபலிக்கிறது” என ஈரானின் பாராளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் அலாயுதீன் புருஜெர்டி தெரிவித்துள்ளார்.



ஈரானின் இவ் அறிவிப்பு தொடர்பில் அமெரிக்கா எந்த பதிலும் அளிக்கவில்லை.


ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் - ஈரான் முடிவு அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், பிரதானமாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.இதனால் உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை 48 மணித்தியாலத்துக்குள் திறக்கவில்லை என்றால், ஈரானின் மின் கட்டமைப்புகளை தாக்குவோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அதன்படி, ஹோர்முஸ் நீரிணை மீதான தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும்பொருட்டு, குறித்த நீரிணை வழியாக கடந்து செல்லும் கப்பல்களிடம் சுமார் 18 கோடி ரூபா சுங்கக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.“இது ஈரானின் பலத்தை வெளிப்படுத்துகிறது. போர் காரணமாக அதிகரித்துள்ள அரசுச் செலவுகளை சமாளிக்கவும் உதவும். இது ஈரானின் அதிகாரத்தையும் பிரதிபலிக்கிறது” என ஈரானின் பாராளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் அலாயுதீன் புருஜெர்டி தெரிவித்துள்ளார்.ஈரானின் இவ் அறிவிப்பு தொடர்பில் அமெரிக்கா எந்த பதிலும் அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

Advertisement