• Apr 22 2026

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

Chithra / Mar 11th 2026, 9:25 am
image


மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 


எவ்வாறாயினும், ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 


இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) குறிப்பிட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எவ்வாறாயினும், ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) குறிப்பிட்டுள்ளது.மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement