• Apr 30 2025

தேசபந்துவை விசாரிக்க தயாராகும் புலனாய்வுக் குழு

Chithra / Apr 30th 2025, 9:55 am
image

 

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு உதவ ஒரு புலனாய்வுக் குழு பெயரிடப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை குழு நாடாளுமன்றில் மூன்றாவது முறையாக கூடியபோது குறித்த புலனாய்வு குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது விசாரணை தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றில் கூடியதாக தென்னிலைங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைக் குழுவிற்கு உதவுவதற்காக ஒரு பொலிஸ் புலனாய்வுக் குழுவை பரிந்துரைத்து அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் குழு விடுத்த கோரிக்கையின் பேரில், குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நியமிக்கப்பட்ட இந்த புலனாய்வு விசாரணைக் குழுவின் உதவியுடன் மேலும் விசாரணைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

தேசபந்துவை விசாரிக்க தயாராகும் புலனாய்வுக் குழு  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு உதவ ஒரு புலனாய்வுக் குழு பெயரிடப்பட்டுள்ளது.தேசபந்து தென்னகோன் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை குழு நாடாளுமன்றில் மூன்றாவது முறையாக கூடியபோது குறித்த புலனாய்வு குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவானது விசாரணை தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றில் கூடியதாக தென்னிலைங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.விசாரணைக் குழுவிற்கு உதவுவதற்காக ஒரு பொலிஸ் புலனாய்வுக் குழுவை பரிந்துரைத்து அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் குழு விடுத்த கோரிக்கையின் பேரில், குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.அதன்படி நியமிக்கப்பட்ட இந்த புலனாய்வு விசாரணைக் குழுவின் உதவியுடன் மேலும் விசாரணைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement