காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் (OMP) இன்று (16) கல்முனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுவரும் விசாரணைகளின்போது, பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் துயரங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் தற்போதைய நிலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, காணாமல் போன தனது கணவரை 36 ஆண்டுகளாகத் தேடி வருவதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
"1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் கிடைக்கும் வரை நாங்களும் பல இடங்களில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். 36 ஆண்டுகளாகியும் எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த முடிவும் கிடைக்கவில்லை" என அவர் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
அதன்படி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் ஆரம்பத்தில் சுமார் 25,000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் காணப்பட்டதாகவும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட விடயங்களைச் சரிபார்த்த பின்னர் தற்போது சுமார் 17,000 பேரின் தரவுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த 17,000 பேரில் சுமார் 11,000 பேர் தொடர்பாக இதுவரை முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
தமது அலுவலகத்தின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளின்போது பிறப்புச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகள் மாத்திரமே சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களிடமுள்ள மூல ஆவணங்களை எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒப்படைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை (15) ஆரம்பமான இந்தச் சந்திப்புகள் இன்று வெள்ளிக்கிழமை (16) வரை இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது தமது குடும்ப உறவுகளை இழந்த பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளனர்.
பல தசாப்தங்களாகத் தமது உறவுகளின் நிலை குறித்து எந்தவித உறுதியான தகவலும் கிடைக்காமல் தவித்துவரும் குடும்பத்தினர், தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் இந்த விசாரணைகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்ட 17,000 பேர் தொடர்பில் விசாரணை – கல்முனையில் 119 குடும்பங்களுக்கு அழைப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் (OMP) இன்று (16) கல்முனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுவரும் விசாரணைகளின்போது, பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் துயரங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் தற்போதைய நிலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்போது, காணாமல் போன தனது கணவரை 36 ஆண்டுகளாகத் தேடி வருவதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்."1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் கிடைக்கும் வரை நாங்களும் பல இடங்களில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். 36 ஆண்டுகளாகியும் எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த முடிவும் கிடைக்கவில்லை" என அவர் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டார்.அதன்படி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் ஆரம்பத்தில் சுமார் 25,000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் காணப்பட்டதாகவும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட விடயங்களைச் சரிபார்த்த பின்னர் தற்போது சுமார் 17,000 பேரின் தரவுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த 17,000 பேரில் சுமார் 11,000 பேர் தொடர்பாக இதுவரை முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.தமது அலுவலகத்தின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளின்போது பிறப்புச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகள் மாத்திரமே சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களிடமுள்ள மூல ஆவணங்களை எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒப்படைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை (15) ஆரம்பமான இந்தச் சந்திப்புகள் இன்று வெள்ளிக்கிழமை (16) வரை இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன.கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது தமது குடும்ப உறவுகளை இழந்த பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளனர்.பல தசாப்தங்களாகத் தமது உறவுகளின் நிலை குறித்து எந்தவித உறுதியான தகவலும் கிடைக்காமல் தவித்துவரும் குடும்பத்தினர், தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் இந்த விசாரணைகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.