• Aug 15 2025

சர்வதேச புத்தகத் திருவிழா யாழில் இன்று ஆரம்பம்!

shanuja / Aug 15th 2025, 1:27 pm
image

யாழ்ப்பாணம் - சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது. 

 

அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17) வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. 


இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளன. 

 

சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விலைக்கழிவுகளுடன் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன. 

 

சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச புத்தகத் திருவிழா யாழில் இன்று ஆரம்பம் யாழ்ப்பாணம் - சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது.  அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17) வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளன.  சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விலைக்கழிவுகளுடன் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.  சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement