• May 23 2026

Industry Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்ட அநுர! 450 கண்காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தல்

shanu / Sep 19th 2025, 8:58 pm
image

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (19) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். 


கண்காட்சி கூடங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, தொழில்முனைவோர் மற்றும் கைத்தொழில்துறையினருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.


கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு  மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட Industry Expo 2025  கண்காட்சி செப்டெம்பர் 18-21 வரை பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.


கைத்தொழில்துறை வளர்ச்சியில் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண்பதே இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.


நாட்டின் 25 கைத்தொழில்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலுமுள்ள கைத்தொழில்துறையினரின் 450 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு கண்காட்சியில்  பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால்  சமர்ப்பிக்கப்படும் புத்தாக்க வலயம்  கண்காட்சியல் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது. பாடசாலை தொழில்முனைவோர் வட்டத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி அரங்குகளும் இந்த ஆண்டு  Industry Expo 2025 கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


தேசிய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையத்தினால்  (NERD) ஒரு சேவை கூடமும், கைத்தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனைத்து அரச மற்றும் வங்கி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ONE STOP service  கூடமும் இந்த ஆண்டு கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.


கைத்தொழில்துறை உரிமையாளர்களுக்கு அவசியமான இயந்திரங்கள், பொதியிடல் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கைத்தொழில்துறை Industry Expo 2025 கண்காட்சியில்  விநியோகஸ்தர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி  பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Industry Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்ட அநுர 450 கண்காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தல் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (19) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். கண்காட்சி கூடங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, தொழில்முனைவோர் மற்றும் கைத்தொழில்துறையினருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு  மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட Industry Expo 2025  கண்காட்சி செப்டெம்பர் 18-21 வரை பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.கைத்தொழில்துறை வளர்ச்சியில் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண்பதே இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.நாட்டின் 25 கைத்தொழில்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலுமுள்ள கைத்தொழில்துறையினரின் 450 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு கண்காட்சியில்  பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால்  சமர்ப்பிக்கப்படும் புத்தாக்க வலயம்  கண்காட்சியல் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது. பாடசாலை தொழில்முனைவோர் வட்டத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி அரங்குகளும் இந்த ஆண்டு  Industry Expo 2025 கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.தேசிய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையத்தினால்  (NERD) ஒரு சேவை கூடமும், கைத்தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனைத்து அரச மற்றும் வங்கி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ONE STOP service  கூடமும் இந்த ஆண்டு கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.கைத்தொழில்துறை உரிமையாளர்களுக்கு அவசியமான இயந்திரங்கள், பொதியிடல் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கைத்தொழில்துறை Industry Expo 2025 கண்காட்சியில்  விநியோகஸ்தர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி  பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement