• May 29 2025

இந்திய மீனவர்களின் அத்துமீறல்: பாராளுமன்றில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

Sharmi / May 26th 2025, 4:05 pm
image

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் வரை நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்களின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்டோர் அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காணிப் பிரச்சினை, மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவது உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்படி பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு மத்தியிலேயே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெற்றுள்ளது.

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், இலங்கை கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இக்கூட்டத்தின் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


இந்திய மீனவர்களின் அத்துமீறல்: பாராளுமன்றில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல். இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் வரை நடைபெற்றது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்களின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்டோர் அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காணிப் பிரச்சினை, மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவது உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.மேற்படி பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு மத்தியிலேயே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெற்றுள்ளது. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், இலங்கை கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இக்கூட்டத்தின் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement