• May 16 2025

11 ஆண்டுகளின் பின்னர் தேயிலை மூலம் அதிகூடிய வருமானம்!

Chithra / May 15th 2025, 9:04 am
image

 

தேயிலையின் மூலம் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். 

எட்டாவது  தேசிய தேயிலை நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (13) பதுளை முதியாங்கனை விகாரையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை மூலம் 355 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றிருந்தது.

எவ்வாறிருப்பினும் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டின் முதல் காலாண்டில் அதனை 371 மில்லியன் டொலர் வரை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளது. 

இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை அதிக வருமானம் ஈட்டும் துறையாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

 


11 ஆண்டுகளின் பின்னர் தேயிலை மூலம் அதிகூடிய வருமானம்  தேயிலையின் மூலம் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். எட்டாவது  தேசிய தேயிலை நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (13) பதுளை முதியாங்கனை விகாரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை மூலம் 355 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றிருந்தது.எவ்வாறிருப்பினும் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டின் முதல் காலாண்டில் அதனை 371 மில்லியன் டொலர் வரை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை அதிக வருமானம் ஈட்டும் துறையாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement