• Nov 28 2025

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு நான்கு வான்கதவுகள் திறப்பு

dorin / Nov 27th 2025, 8:01 pm
image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை தாண்டி 20.3 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான் கதவுகளும் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1 பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அத்துடன், நெளுக்குளம் - நேரியகுளம் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு நான்கு வான்கதவுகள் திறப்பு பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கைபாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.வவுனியாவில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை தாண்டி 20.3 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான் கதவுகளும் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1 பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.அத்துடன், நெளுக்குளம் - நேரியகுளம் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement