அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு(GCMMF) அமுல் பால் விலை உயர்வை அறிவித்துள்ளது.
பால் உற்பத்தியில் முக்கிய நிறுவனங்களான அமுல் நிறுவனம் பாலின் விலையை லீற்றருக்கு 2 ரூபாவால் அகரித்து உள்ளது.
அதன் படி, அமுல் கிரீம் பால் லீற்றர் 65 ரூபாயில் இருந்து 67 ரூபாய்க்கும், டோன்ட் பால் லீற்றருக்கு விலை 53 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் பசுப்பாலின் விலை லீற்றர் 58 ரூபாயாகவும், எருமை பால் லீற்றர் 71 ரூபாயில் இருந்து 73 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அமுல் நிறுவனத்தின் புதிய விலை ஏற்றத்தின் படி, அமுல் கோல்ட் 500ml 34 ரூபாய்க்கும், அமுல் தாசா 500ml 28 ரூபாய்க்கும், அமுல் சக்தி 500ml 31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமுல் பால் விலை அதிகரிப்பதற்கு ஒருநாள் முன்னதாக மதர் நிறுவனமும் அதன் விலையை ரூ. 2 அதிகரித்தது என்பது குறிப்பிடதக்கது.
பாலின் விலை அதிகரிப்பு அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு(GCMMF) அமுல் பால் விலை உயர்வை அறிவித்துள்ளது. பால் உற்பத்தியில் முக்கிய நிறுவனங்களான அமுல் நிறுவனம் பாலின் விலையை லீற்றருக்கு 2 ரூபாவால் அகரித்து உள்ளது. அதன் படி, அமுல் கிரீம் பால் லீற்றர் 65 ரூபாயில் இருந்து 67 ரூபாய்க்கும், டோன்ட் பால் லீற்றருக்கு விலை 53 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.மேலும் பசுப்பாலின் விலை லீற்றர் 58 ரூபாயாகவும், எருமை பால் லீற்றர் 71 ரூபாயில் இருந்து 73 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.அமுல் நிறுவனத்தின் புதிய விலை ஏற்றத்தின் படி, அமுல் கோல்ட் 500ml 34 ரூபாய்க்கும், அமுல் தாசா 500ml 28 ரூபாய்க்கும், அமுல் சக்தி 500ml 31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அமுல் பால் விலை அதிகரிப்பதற்கு ஒருநாள் முன்னதாக மதர் நிறுவனமும் அதன் விலையை ரூ. 2 அதிகரித்தது என்பது குறிப்பிடதக்கது.