• Jun 15 2026

நோய்த்தாக்கம் அதிகரிப்பு: வைத்தியசாலைகளில் குவியும் நோயாளர்கள் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Chithra / Jun 14th 2026, 3:55 pm
image


டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்த்தாக்கங்கள் காரணமாக நாட்டின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, தினசரி டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் வீதமும் தொடர்ந்து உயர்வடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன் பதில் பணிப்பாளர் வைத்தியர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நேற்று (13) சனிக்கிழமை வரையில் நாட்டில் மொத்தமாக 41,144 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் சுமார் 51 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.


முன்னதாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 750 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது அது சுமார் 630 ஆகக் குறைந்திருந்தாலும், நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல வைத்தியசாலைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வார்டுகளில் நோயாளர்களின் நெரிசலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


நிலைமை மேலும் தீவிரமடைந்தால், சுகாதார அமைப்பு மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகக்கூடும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்த்தாக்கம் அதிகரிப்பு: வைத்தியசாலைகளில் குவியும் நோயாளர்கள் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்த்தாக்கங்கள் காரணமாக நாட்டின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, தினசரி டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் வீதமும் தொடர்ந்து உயர்வடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன் பதில் பணிப்பாளர் வைத்தியர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நேற்று (13) சனிக்கிழமை வரையில் நாட்டில் மொத்தமாக 41,144 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் சுமார் 51 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.முன்னதாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 750 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது அது சுமார் 630 ஆகக் குறைந்திருந்தாலும், நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல வைத்தியசாலைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வார்டுகளில் நோயாளர்களின் நெரிசலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.நிலைமை மேலும் தீவிரமடைந்தால், சுகாதார அமைப்பு மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகக்கூடும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement