• Aug 04 2025

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்

Chithra / Aug 4th 2025, 10:20 am
image


கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான இலக்கு 3.7 பில்லியன் டொலரை எட்டும் என்று அவர்  குறிப்பிட்டார். 

நுவரெலியா சீதை அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்தார். 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். பலர் மத ரீதியாக சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

கோனேஷ்வரம் ஆலயம், கதிர்காமம் போன்ற பல்வேறு இடங்களைக் காண ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய பலம். 

சீதையம்மன் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.

நாம் பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தோம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த நிலையிலிருந்து வெளியேற, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். என்றார். 


சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம் கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான இலக்கு 3.7 பில்லியன் டொலரை எட்டும் என்று அவர்  குறிப்பிட்டார். நுவரெலியா சீதை அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். பலர் மத ரீதியாக சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.கோனேஷ்வரம் ஆலயம், கதிர்காமம் போன்ற பல்வேறு இடங்களைக் காண ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய பலம். சீதையம்மன் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.நாம் பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தோம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த நிலையிலிருந்து வெளியேற, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement