• Aug 26 2025

புதிய அரசாங்கத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம்; குற்றவாளிகள் கைது - வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

shanuja / Aug 26th 2025, 10:17 am
image

குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.


தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு நேற்று விஜயம் செய்து  அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்ட 

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  


புதிய அரசாங்கத்தின் நாட்டின் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோட்பாடு, எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறது. 


இன்று இலங்கையில், தட்டு மாறுதல் அரசியல் மாற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றது. இதனோடு இனவாதமும் ஊழலும் நிறைந்த அரசியல் போக்கும் தடுமாற்றம் அடைந்திருக்கின்றது என்பதையே இந்த எதிர்கட்சியினரின் ஒன்றிணைவு எடுத்துக்காட்டுகின்றது.


ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை இந்த நாட்டுக்கு வரி செலுத்தும் மக்கள் வரவேற்கின்றனர். இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது.


மக்களுக்கு தேவைப்பட்ட அரசியலை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றி கூறு போட்டு, ஆட்சி செய்த அரசியல் நாகரீகம் இனிமேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம்; குற்றவாளிகள் கைது - வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு நேற்று விஜயம் செய்து  அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  புதிய அரசாங்கத்தின் நாட்டின் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோட்பாடு, எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறது. இன்று இலங்கையில், தட்டு மாறுதல் அரசியல் மாற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றது. இதனோடு இனவாதமும் ஊழலும் நிறைந்த அரசியல் போக்கும் தடுமாற்றம் அடைந்திருக்கின்றது என்பதையே இந்த எதிர்கட்சியினரின் ஒன்றிணைவு எடுத்துக்காட்டுகின்றது.ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை இந்த நாட்டுக்கு வரி செலுத்தும் மக்கள் வரவேற்கின்றனர். இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது.மக்களுக்கு தேவைப்பட்ட அரசியலை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றி கூறு போட்டு, ஆட்சி செய்த அரசியல் நாகரீகம் இனிமேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement