• Nov 04 2026

டிசம்பரில் வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை - உண்மை வெளிவருமா? அமைச்சர் கூறியது என்ன?

Chithra / Nov 1st 2026, 4:40 pm
image


சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அறிக்கை காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போதிலும், குழுவின் தீர்மானங்களை அறிவிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் குழுவின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதற்கமைய, குறித்த பாராளுமன்றக் குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. எனவே, அதற்கு முன்னதாகவே குழுவின் இறுதி அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.


டிசம்பரில் வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை - உண்மை வெளிவருமா அமைச்சர் கூறியது என்ன சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அறிக்கை காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போதிலும், குழுவின் தீர்மானங்களை அறிவிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் குழுவின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.இதற்கமைய, குறித்த பாராளுமன்றக் குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. எனவே, அதற்கு முன்னதாகவே குழுவின் இறுதி அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement