• Jun 14 2026

பல மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியான வானிலை அறிக்கை

Aathira / Jun 13th 2026, 7:08 am
image

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் வாய்ப்பு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பல மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு. வெளியான வானிலை அறிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இந்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் வாய்ப்பு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement