• Aug 20 2025

சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள் - தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

shanuja / Aug 19th 2025, 4:27 pm
image

வவுனியா குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டிக் கடத்தப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


வவுனியா குளத்தில் இருந்து தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது.


பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச்செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மை நாட்களாக இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.


சொற்பநாட்களில் 7 வரையான மரங்கள் அடியோடு அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனவே குறித்த சட்டவிரோத செயற்பாட்டை உரியதிணைக்களங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள் - தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வவுனியா குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டிக் கடத்தப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா குளத்தில் இருந்து தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது.பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச்செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மை நாட்களாக இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சொற்பநாட்களில் 7 வரையான மரங்கள் அடியோடு அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே குறித்த சட்டவிரோத செயற்பாட்டை உரியதிணைக்களங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement