• May 23 2026

கொழும்பு - மகாநாம கல்லூரியில் மூன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம்; இதுவரையில் நடவடிக்கையில்லை -சபையில் சஜித் சுட்டிக்காட்டு!

shanu / Oct 22nd 2025, 12:42 pm
image

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று  சிறுவர்கள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 



கொழும்பு மகாநாம கல்லூரியில் குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால்  கடந்த  4 ஆம் திகதி மூன்று சிறுவர்கள்  கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து அதிபரோ அல்லது ஆசிரியர்களோ எந்தத் தெளிவானதொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.


மருத்துவர்களிடம் அனுப்பும் நடவடிக்கையோ, தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனம் குறித்தோ அல்லது இந்த துஷ்பிரயோகத்தைச் செய்த குற்றவாளிக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. 


இரு ஆசிரியர்கள் இது தொடர்பில் அதிபரோடு பேசும் போது அதிபர் குறித்த இரு ஆசிரியர்களையும் மிரட்டியுள்ளார். இது குறித்து முறைப்பாடு பதிவு செய்ய முற்படும் போது, நீதிமன்றங்கள் தோறும் அழைத்துச் செல்ல வேண்டி வரும் என்றும், பல ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிக்கப்படலாம் என்றும் பெற்றோர்களை பயமுறுத்தியுள்ளார். பாடசாலை முன்பாக போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணையை நடத்தி, குறித்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.


குற்றவாளி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த செல்வாக்குக்கும் அடிபணியாமல் விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு - மகாநாம கல்லூரியில் மூன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம்; இதுவரையில் நடவடிக்கையில்லை -சபையில் சஜித் சுட்டிக்காட்டு கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று  சிறுவர்கள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மகாநாம கல்லூரியில் குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால்  கடந்த  4 ஆம் திகதி மூன்று சிறுவர்கள்  கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து அதிபரோ அல்லது ஆசிரியர்களோ எந்தத் தெளிவானதொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.மருத்துவர்களிடம் அனுப்பும் நடவடிக்கையோ, தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனம் குறித்தோ அல்லது இந்த துஷ்பிரயோகத்தைச் செய்த குற்றவாளிக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இரு ஆசிரியர்கள் இது தொடர்பில் அதிபரோடு பேசும் போது அதிபர் குறித்த இரு ஆசிரியர்களையும் மிரட்டியுள்ளார். இது குறித்து முறைப்பாடு பதிவு செய்ய முற்படும் போது, நீதிமன்றங்கள் தோறும் அழைத்துச் செல்ல வேண்டி வரும் என்றும், பல ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிக்கப்படலாம் என்றும் பெற்றோர்களை பயமுறுத்தியுள்ளார். பாடசாலை முன்பாக போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணையை நடத்தி, குறித்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.குற்றவாளி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த செல்வாக்குக்கும் அடிபணியாமல் விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement