வெலிகம பிரதேச சபைத் தலைவர், சபைக்குள் இருக்கும்போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது.
தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச சபைத் தலைவர் என்பவர் மக்கள் பிரதிநிதி ஆவார்.
மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவது பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.
இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக இருக்கிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அறிவித்த போது சபாநாயகர், நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தற்போது இது குறித்து கதைக்க முடியாது என்று அறிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சில நிமிடங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபைத் தலைவர் மரணமடைந்ததாக தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய நிலையில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேச தொடங்கிய நிலையில் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் இவ்விடயம் தெடர்பில் தற்போது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை; இதுதான் தேசியப் பாதுகாப்பா சபையில் எதிர்க்கட்சியினர் கூச்சல் வெலிகம பிரதேச சபைத் தலைவர், சபைக்குள் இருக்கும்போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதேச சபைத் தலைவர் என்பவர் மக்கள் பிரதிநிதி ஆவார். மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவது பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக இருக்கிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அறிவித்த போது சபாநாயகர், நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தற்போது இது குறித்து கதைக்க முடியாது என்று அறிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபைத் தலைவர் மரணமடைந்ததாக தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய நிலையில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேச தொடங்கிய நிலையில் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில் இவ்விடயம் தெடர்பில் தற்போது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.