• Apr 17 2026

காணி மக்களுக்கு என்றால் ஏன் இந்த சுவீகரிப்பு? இயக்கச்சி இராணுவ முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

shanu / Apr 2nd 2026, 11:19 pm
image

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் 17 பேருக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டது.  


 குறித்த நிள அளவையை எதிர்த்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில்   கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்,  இன்றைய தினம் காலை 8 மணியளவில் குறித்த இராணுவ முகாம் முன்றலில் இடம்பெற்றது. 


இதன்போது காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதன்போது பொறுப்புள்ள அதிகாரிகளே உங்களுக்குத் தெரியாதா இது மக்கள் காணி என்று, சொந்தக் காணியில் வாழவிடு, மக்கள் காணி மக்களுக்கு என்கிறீர்கள், பின்பு ஏன் இந்தச் சுவீகரிப்பு ,வெளியேறு வெளியேறு எமது சொந்தக் காணியை விட்டு இராணுவமே வெளியேறு என்றவாறு கோஷங்களை எழுப்பினர். 

 

அதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க  அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி அளவீட்டு பணி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. 


 ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காணி மக்களுக்கு என்றால் ஏன் இந்த சுவீகரிப்பு இயக்கச்சி இராணுவ முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் 17 பேருக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டது.   குறித்த நிள அளவையை எதிர்த்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில்   கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்,  இன்றைய தினம் காலை 8 மணியளவில் குறித்த இராணுவ முகாம் முன்றலில் இடம்பெற்றது. இதன்போது காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொறுப்புள்ள அதிகாரிகளே உங்களுக்குத் தெரியாதா இது மக்கள் காணி என்று, சொந்தக் காணியில் வாழவிடு, மக்கள் காணி மக்களுக்கு என்கிறீர்கள், பின்பு ஏன் இந்தச் சுவீகரிப்பு ,வெளியேறு வெளியேறு எமது சொந்தக் காணியை விட்டு இராணுவமே வெளியேறு என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.  அதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க  அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி அளவீட்டு பணி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement