முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பலத்த வாதங்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், அண்மையில் வெளியான நீதிமன்ற உத்தரவுகளின் பின்னணியில் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் மீதான சட்ட மற்றும் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு நேரடியாக சவால் விடுத்த பிரசன்ன குணசேன, “முடிந்தால் பசில் ராஜபக்ஸவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ராஜபக்ஸ குடும்பத்துடன் தொடர்புடைய பல சட்ட வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன வலியுறுத்தினார்.
முடிந்தால் பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு வரவழையுங்கள் நாமலுக்கு பிரதி அமைச்சர் சவால் முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பலத்த வாதங்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், அண்மையில் வெளியான நீதிமன்ற உத்தரவுகளின் பின்னணியில் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் மீதான சட்ட மற்றும் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு நேரடியாக சவால் விடுத்த பிரசன்ன குணசேன, “முடிந்தால் பசில் ராஜபக்ஸவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், ராஜபக்ஸ குடும்பத்துடன் தொடர்புடைய பல சட்ட வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.எதிர்வரும் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன வலியுறுத்தினார்.