ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம்.நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.இனியும் பழிவாங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்கால அரசியல் திட்டமிடலுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாங்கள் ஒன்றினையவில்லை. பெரும்பான்மை அதிகாரம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்தான் அரசியல் பழிவாங்கல்களாக பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.இனியும் பழிவாங்க போவதில்லை. வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டால் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும். மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களிலும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டது. இன்றும் வெறுப்புடன் செயற்படுகிறது.
ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.இன்று ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் எதிர்கட்சிக்கு செல்லலாம்.ஆனால் ஜனநாயகம் என்றும் உறுதியாக பேணப்பட வேண்டும் என்றார்.
யாரையும் பழிவாங்கவில்லை: இனியும் பழிவாங்கப் போவதில்லை - நாமல் ராஜபக்ஷ ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம்.நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.இனியும் பழிவாங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,எதிர்கால அரசியல் திட்டமிடலுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாங்கள் ஒன்றினையவில்லை. பெரும்பான்மை அதிகாரம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம்.இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்தான் அரசியல் பழிவாங்கல்களாக பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.இனியும் பழிவாங்க போவதில்லை. வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டால் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும். மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களிலும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டது. இன்றும் வெறுப்புடன் செயற்படுகிறது.ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.இன்று ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் எதிர்கட்சிக்கு செல்லலாம்.ஆனால் ஜனநாயகம் என்றும் உறுதியாக பேணப்பட வேண்டும் என்றார்.