கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால், ரிசுப் பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் நகரைச் சேர்ந்த பெனிட்ட ஜெயஅன்னால் என்ற பெண்ணும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் திண்டுக்கல் பகுதியிலேயே வசித்து வந்தனர்.
இவர்களுக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் குறித்த பெண்ணை அவரது பெற்றோர் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவரது கணவர், மனைவி மற்றும் குழநை்தையைப் பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது குழந்தை அசைவின்றிக் கிடந்துள்ளது.
உடனே குழந்தையை பாலூரிலுள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது குழந்தை இறந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பில் மருத்துவமனைத் தரப்பிலிருந்து பொலிஸாருக்கத் தகவல் வழங்கப்பட்டது. பிறந்து 42 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருங்கல் பொலிஸார் விசாரணை நடத்திவந்தனர்.
குழந்தையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி ஒன்றின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாவை உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
அதனையடுத்து குழந்தையின் தாயான குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. விசாரணையில் குழந்தையைக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
குழந்தை பிறந்ததிலிருந்து தனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்றும் அவர் அன்பைக் குழந்தையிடம் மட்டுமே காட்டினார். என்னிடம் பாசம் காட்டவில்லை. குழந்தையால் தானே அவர் என்னிடம் பாசம் காட்டவில்லை என்ற கோவத்தில் ரிசுப் பேப்பரைக் குழந்தையின் வாயில் திணித்தேன். அதில் குழந்தை உயிரிழந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த தாய் கைது செய்யப்பட்டார்.
குழந்தை மீது மட்டுமே கணவருக்கு அதிக பாசம்; ருசு பேப்பரை வாயில் வைத்து குழந்தையைக் கொன்ற கொடூர தாய் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால், ரிசுப் பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் நகரைச் சேர்ந்த பெனிட்ட ஜெயஅன்னால் என்ற பெண்ணும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் திண்டுக்கல் பகுதியிலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் குறித்த பெண்ணை அவரது பெற்றோர் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவரது கணவர், மனைவி மற்றும் குழநை்தையைப் பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது குழந்தை அசைவின்றிக் கிடந்துள்ளது. உடனே குழந்தையை பாலூரிலுள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தை இறந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பில் மருத்துவமனைத் தரப்பிலிருந்து பொலிஸாருக்கத் தகவல் வழங்கப்பட்டது. பிறந்து 42 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருங்கல் பொலிஸார் விசாரணை நடத்திவந்தனர். குழந்தையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி ஒன்றின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாவை உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டனர். அதனையடுத்து குழந்தையின் தாயான குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. விசாரணையில் குழந்தையைக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். குழந்தை பிறந்ததிலிருந்து தனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்றும் அவர் அன்பைக் குழந்தையிடம் மட்டுமே காட்டினார். என்னிடம் பாசம் காட்டவில்லை. குழந்தையால் தானே அவர் என்னிடம் பாசம் காட்டவில்லை என்ற கோவத்தில் ரிசுப் பேப்பரைக் குழந்தையின் வாயில் திணித்தேன். அதில் குழந்தை உயிரிழந்தது எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த தாய் கைது செய்யப்பட்டார்.