திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11) மாலை இடம் பெற்றுள்ளது.
மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி வேகமாக நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார என்பவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கே யூ. அனுஷ்கா என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகங்கள் மூலமாக அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான இராணுவ வீரரான 34 வயதுடையவரை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொயவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி - கணவன் பலி மனைவி படுகாயம் திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11) மாலை இடம் பெற்றுள்ளது. மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி வேகமாக நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார என்பவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கே யூ. அனுஷ்கா என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகங்கள் மூலமாக அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான இராணுவ வீரரான 34 வயதுடையவரை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொயவெவ பொலிஸார் தெரிவித்தனர்.