புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் (12) விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை ஈடுபடுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்காக மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கும், தூர இடங்களிலிருந்து கொழும்புக்கும் என இரு கட்டங்களாக இந்தச் சேவை முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் வரை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதுடன், ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கான சேவை இடம்பெறவுள்ளது.
இந்த விசேட சேவைக்காக ஏனைய பிரதேச பிரிவுகளிலிருந்து 1,500 பேருந்துகள் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சாதாரண பயண முறைகளின் கீழ் 1,200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக ஹட்டன் நோக்கி 98 பேருந்துகளும், கண்டி நோக்கி 148 பேருந்துகளும், பதுளை நோக்கி 60 பேருந்துகளும் மற்றும் ஏனைய இடங்களுக்கு 84 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கண்டி, நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய மாவட்டங்களுக்கே அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அந்த மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து இன்னும் சீரடையாததால், அங்கு பயணிகள் கேள்வி அதிகமாக இருப்பதே இதற்குப் பிரதான காரணம் என தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு நிமித்தம் இன்றும் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் (12) விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை ஈடுபடுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்காக மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கும், தூர இடங்களிலிருந்து கொழும்புக்கும் என இரு கட்டங்களாக இந்தச் சேவை முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் வரை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதுடன், ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கான சேவை இடம்பெறவுள்ளது.இந்த விசேட சேவைக்காக ஏனைய பிரதேச பிரிவுகளிலிருந்து 1,500 பேருந்துகள் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சாதாரண பயண முறைகளின் கீழ் 1,200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக ஹட்டன் நோக்கி 98 பேருந்துகளும், கண்டி நோக்கி 148 பேருந்துகளும், பதுளை நோக்கி 60 பேருந்துகளும் மற்றும் ஏனைய இடங்களுக்கு 84 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கண்டி, நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய மாவட்டங்களுக்கே அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அந்த மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து இன்னும் சீரடையாததால், அங்கு பயணிகள் கேள்வி அதிகமாக இருப்பதே இதற்குப் பிரதான காரணம் என தலைவர் தெரிவித்தார்.இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.