பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை நேற்று கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த உதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர்.
பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இந்த மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இலங்கையில் தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 மெட்ரிக் டொன் மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த உதவித் தொகையில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் கூடாரங்கள், போர்வைகள் போன்றவை அடங்கும்.
அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக உயிர்காப்பு ஜெக்கெட்டுகள், படகுகள் மற்றும் நீர் அகற்றும் பம்புகள் ஆகியவை அடங்கும்.
மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய மருந்துகள், பால்மா, மருத்துவ உணவுகள், நுளம்பு வலைகள் போன்றவையும் இதில் அடங்கும்.
எதிர்வரும் நாட்களில், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை நேற்று கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.இலங்கை அரசாங்கத்தின் சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த உதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர்.பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இந்த மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.இலங்கையில் தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 மெட்ரிக் டொன் மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்த உதவித் தொகையில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் கூடாரங்கள், போர்வைகள் போன்றவை அடங்கும்.அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக உயிர்காப்பு ஜெக்கெட்டுகள், படகுகள் மற்றும் நீர் அகற்றும் பம்புகள் ஆகியவை அடங்கும். மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய மருந்துகள், பால்மா, மருத்துவ உணவுகள், நுளம்பு வலைகள் போன்றவையும் இதில் அடங்கும்.எதிர்வரும் நாட்களில், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.