• Jul 21 2025

யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு- மூவர் கைது..!

Sharmi / May 31st 2025, 4:55 pm
image

யாழ் சுன்னாகம் பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோய்ன் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் குறித்த போதைப்பொருளை வாங்க முற்பட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர்களுக்கெதிராக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு- மூவர் கைது. யாழ் சுன்னாகம் பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோய்ன் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த போதைப்பொருளை வாங்க முற்பட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த நபர்களுக்கெதிராக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now