• Jul 04 2025

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையில் இந்தி மொழிக் கற்றல் திட்டம்!

shanuja / Jul 3rd 2025, 10:59 am
image

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி கற்றல் திட்டம் நேற்று(3) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சார அமைப்பான சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்துடன்  இணைந்து குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 


நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.


நிகழ்வைில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிக்கையில், 


மொழியானது இரு நாடுகளுக்கிடையேயான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் கலாசார மற்றும் இராஜதந்திர முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகளவில் இந்தி மொழியை 600 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். இந்தி மொழியை கற்பதனால் மாணவர்களுக்கு இந்தியாவின் செழுமையான இலக்கியம், ஊடகம், தத்துவம் மற்றும் தொழில் வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.- என்றார்.


அதன்பின்னர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார  தெரிவிக்கையில், பன்மொழி திறன்கள் மற்றும் பல் கலாசார விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு முழுமையான கல்விச் சூழலை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.


நிகழ்வில், துணை வேந்தர் பிரிகேடியர் பிரதீப் ரத்னாயக்க, துணை வேந்தர் பேராசிரியர் சனத் தம்மிகா, முகாமைத்துவம், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயக் கல்வி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி லக்ஷிகா லியனாகே, ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையில் இந்தி மொழிக் கற்றல் திட்டம் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி கற்றல் திட்டம் நேற்று(3) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சார அமைப்பான சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்துடன்  இணைந்து குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.நிகழ்வைில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிக்கையில், மொழியானது இரு நாடுகளுக்கிடையேயான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் கலாசார மற்றும் இராஜதந்திர முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகளவில் இந்தி மொழியை 600 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். இந்தி மொழியை கற்பதனால் மாணவர்களுக்கு இந்தியாவின் செழுமையான இலக்கியம், ஊடகம், தத்துவம் மற்றும் தொழில் வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.- என்றார்.அதன்பின்னர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார  தெரிவிக்கையில், பன்மொழி திறன்கள் மற்றும் பல் கலாசார விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு முழுமையான கல்விச் சூழலை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.நிகழ்வில், துணை வேந்தர் பிரிகேடியர் பிரதீப் ரத்னாயக்க, துணை வேந்தர் பேராசிரியர் சனத் தம்மிகா, முகாமைத்துவம், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயக் கல்வி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி லக்ஷிகா லியனாகே, ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement