• May 24 2026

இன்றும் நாட்டில் பலத்த மழை; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை

Aathira / Sep 27th 2025, 7:16 am
image

இன்றும் நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமத்திய மாகாணம், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், 

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்துடன் பலத்த வீசக் கூடும். 

பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாட்டில் பலத்த மழை; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை இன்றும் நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.குறிப்பாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.வடமத்திய மாகாணம், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும்.மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்துடன் பலத்த வீசக் கூடும். பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement