• Apr 21 2026

கடும் மழையால் வான்கதவுகள் சுயமாக திறக்கப்படலாம் ; மகாவலி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை.!

shanu / Jun 1st 2025, 11:18 am
image

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வான்கதவுகள் சுயமாக திறக்கப்படலாம் என்று மகாவலி அபிவிருத்தி அதிகார சபைப் பொறியியலாளர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


சுயமாக வான்கதவுகள் திறக்கப்பட்டால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ் வசிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என மகாவலி அபிவிருத்தி அதிகார சபைப் பொறியியலாளர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். 


இதேவேளை மலையகப் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழைகாரணமாக அதிகளவு நீர் பாய்வதால் மேல்  கொத்மலை  நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் மழையால் வான்கதவுகள் சுயமாக திறக்கப்படலாம் ; மகாவலி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை. நுவரெலியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வான்கதவுகள் சுயமாக திறக்கப்படலாம் என்று மகாவலி அபிவிருத்தி அதிகார சபைப் பொறியியலாளர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுயமாக வான்கதவுகள் திறக்கப்பட்டால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ் வசிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என மகாவலி அபிவிருத்தி அதிகார சபைப் பொறியியலாளர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை மலையகப் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழைகாரணமாக அதிகளவு நீர் பாய்வதால் மேல்  கொத்மலை  நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement