பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்று மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு முல்லேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கார் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் ஹரக் கட்டா உள்ளிட்ட இருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரி விடுமுறையில் இருப்பதால் இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.
“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்று மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு முல்லேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கார் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் ஹரக் கட்டா உள்ளிட்ட இருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரி விடுமுறையில் இருப்பதால் இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.