ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 30.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் ஹங்குராங்கெத்த பிதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ராமையா ருசன்ஸ்குமார் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டயன் ஹியூபட் பெரேரா ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 22 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 22 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டயன் ஹியூபட் பெரேரா 19 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் சுயேட்சை குழு 01 சார்பில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராமையா ருசன்ஸ்குமார் பெயர் முன்மொழியப்பட்டது.
அதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக சுரங்க திசாநாயக்க பெயர் முன்மொழியப்பட்டது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக சுரங்க திசாநாயக்க 19 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதிலும், சுயேட்சை குழு 01 சார்பில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
1. ஹங்குராங்கெத்த பிரதேச சபை (42 உறுப்பினர்கள்)
•தேசிய மக்கள் சக்தி - 20
•ஐக்கிய மக்கள் சக்தி - 09
•ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 04
• ஐக்கிய தேசிய கட்சி - 03
•சர்வஜன அதிகாரம் - 01
•ஐக்கிய மக்கள் முன்னணி – 01
•இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
•சுயேட்சை குழு (01) – 01
•சுயேட்சை குழு (02) – 01
ஹங்குராங்கெத்த பிரதேச சபை-தேசிய மக்கள் சக்தி வசம் ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 30.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் ஹங்குராங்கெத்த பிதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ராமையா ருசன்ஸ்குமார் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டயன் ஹியூபட் பெரேரா ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 22 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 22 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டயன் ஹியூபட் பெரேரா 19 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் சுயேட்சை குழு 01 சார்பில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டார்.இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராமையா ருசன்ஸ்குமார் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக சுரங்க திசாநாயக்க பெயர் முன்மொழியப்பட்டது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக சுரங்க திசாநாயக்க 19 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதிலும், சுயேட்சை குழு 01 சார்பில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டார். 1. ஹங்குராங்கெத்த பிரதேச சபை (42 உறுப்பினர்கள்)• தேசிய மக்கள் சக்தி - 20• ஐக்கிய மக்கள் சக்தி - 09• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 04• ஐக்கிய தேசிய கட்சி - 03• சர்வஜன அதிகாரம் - 01• ஐக்கிய மக்கள் முன்னணி – 01• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02• சுயேட்சை குழு (01) – 01• சுயேட்சை குழு (02) – 01