• May 16 2025

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க அரசு திட்டம்

Chithra / Nov 19th 2024, 7:49 am
image

 

நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை நடைமுறைபடுத்த இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு நாடாளுமன்றமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4-5 பில்லியன் ரூபா என்ற வரம்பில் உள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க அரசு திட்டம்  நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதனை நடைமுறைபடுத்த இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு நாடாளுமன்றமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4-5 பில்லியன் ரூபா என்ற வரம்பில் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement