சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9mm துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று(14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிரியாவில் உள்ள உணவகத்தில் 40 தோட்டாக்கள் மீட்பு சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9mm துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று(14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.