• May 30 2026

அரச எரிபொருள் மானியம் விரைவில் முடிவடையலாம்! - IMF

IMF
Chithra / May 29th 2026, 8:24 am
image

 

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, அனுமதியை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு வழங்கியுள்ளது. 

இதன் மூலம் இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப்பெறவுள்ளதுடன், இத்திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்த விபரங்களை விளக்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் 

பாபஜோர்ஜியோ நடத்திய செய்தியாளர் சந்திப்பில்

2022 நெருக்கடி காலத்தில் 60%-70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மாத பணவீக்க உயர்வு மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்ட தற்காலிகமானதே தவிர, பணம் அச்சிட்டதால் உருவானது அல்ல. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்காக மத்திய வங்கி IMF திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறது. கொள்கை வட்டி விகிதங்கள் 5% பணவீக்க இலக்கிற்கு ஏற்பவே பேணப்படுகின்றன.

நாணய மாற்று விகிதம் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுகிறது. மத்திய கிழக்கு நெருக்கடியால் மந்தமடைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்கப்பட வேண்டும். தற்போது அமுலில் உள்ள 100 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் மானியப் பொதியானது முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இந்த மானியம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் பயன்பாட்டுத் தன்மையைப் பொறுத்து, அதற்கு முன்னரே கூட இது முடிவுக்கு வரலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுக்கு ஏற்ப இந்த தற்காலிக மானியப் பொதியை முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக தூதுக்குழு தலைவர் இவான் பாபஜோர்ஜியோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அரச எரிபொருள் மானியம் விரைவில் முடிவடையலாம் - IMF  இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, அனுமதியை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப்பெறவுள்ளதுடன், இத்திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.இதுகுறித்த விபரங்களை விளக்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் பாபஜோர்ஜியோ நடத்திய செய்தியாளர் சந்திப்பில்2022 நெருக்கடி காலத்தில் 60%-70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த மாத பணவீக்க உயர்வு மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்ட தற்காலிகமானதே தவிர, பணம் அச்சிட்டதால் உருவானது அல்ல. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்காக மத்திய வங்கி IMF திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறது. கொள்கை வட்டி விகிதங்கள் 5% பணவீக்க இலக்கிற்கு ஏற்பவே பேணப்படுகின்றன.நாணய மாற்று விகிதம் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுகிறது. மத்திய கிழக்கு நெருக்கடியால் மந்தமடைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்கப்பட வேண்டும். தற்போது அமுலில் உள்ள 100 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் மானியப் பொதியானது முற்றிலும் தற்காலிகமானதாகும்.இந்த மானியம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் பயன்பாட்டுத் தன்மையைப் பொறுத்து, அதற்கு முன்னரே கூட இது முடிவுக்கு வரலாம்.சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுக்கு ஏற்ப இந்த தற்காலிக மானியப் பொதியை முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக தூதுக்குழு தலைவர் இவான் பாபஜோர்ஜியோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement