• May 28 2025

திருமணம்வேண்டாமென மறுத்த காதலி; கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்று கால்வாயில் வீசிய காதலன்!

Chithra / May 26th 2025, 11:37 am
image

 

திருமணம் செய்ய மறுத்த தனது காதலியை, காதலன் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்த ருச்சிகா என்ற 25 வயதான பெண்ணே இவ்வாறு காதலனால் கொலலப்பட்டுள்ளார். 

இந்த கொலையில் அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர். 

பொலிஸார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் ராம்கங்கா ஃபீடர் சேனல் கால்வாயில் ஒரு பையில் சடலமாக ருச்சிகா மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கைப்படி சுமார் 6-7 நாட்களுக்கு முன்பே ருச்சிகா கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

விசாரணையில், சிவம் தனது காதலியான ருச்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதையும், ஆனால் ருச்சிகா அவரை “முதலில் அரச வேலையில் சேருங்கள், பிறகு திருமணம்” என மறுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சிவம் கோபத்தில் தாவணியைப் பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், 

உடலை பெற்றோருடன் சேர்ந்து ஒரு பையில் அடைத்து ராம்கங்கா கால்வாயில் வீசிவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ருச்சிகாவின் செருப்புகள் மற்றும் கொலையில் பயன்படுத்தப்பட்ட பையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவர் மீதும்  IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருமணம்வேண்டாமென மறுத்த காதலி; கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்று கால்வாயில் வீசிய காதலன்  திருமணம் செய்ய மறுத்த தனது காதலியை, காதலன் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்த ருச்சிகா என்ற 25 வயதான பெண்ணே இவ்வாறு காதலனால் கொலலப்பட்டுள்ளார். இந்த கொலையில் அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர். பொலிஸார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ராம்கங்கா ஃபீடர் சேனல் கால்வாயில் ஒரு பையில் சடலமாக ருச்சிகா மீட்கப்பட்டார்.பிரேத பரிசோதனை அறிக்கைப்படி சுமார் 6-7 நாட்களுக்கு முன்பே ருச்சிகா கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.விசாரணையில், சிவம் தனது காதலியான ருச்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதையும், ஆனால் ருச்சிகா அவரை “முதலில் அரச வேலையில் சேருங்கள், பிறகு திருமணம்” என மறுத்ததையும் ஒப்புக்கொண்டார்.தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சிவம் கோபத்தில் தாவணியைப் பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், உடலை பெற்றோருடன் சேர்ந்து ஒரு பையில் அடைத்து ராம்கங்கா கால்வாயில் வீசிவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.ருச்சிகாவின் செருப்புகள் மற்றும் கொலையில் பயன்படுத்தப்பட்ட பையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவர் மீதும்  IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement