• Nov 15 2025

சபரிமலை ஐயப்பன் யாத்திரை தொடர்பில் வெளியான வர்த்தமானி

Chithra / Nov 13th 2025, 8:14 pm
image

  

ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்திருந்தார். 

இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெற்றதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம்  அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது உலக வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாவதோடு, இலங்கை, ஐயப்பன் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகனப்படுத்திய ஒரே நாடு என்று பெருமையினையும் பெற்றுள்ளது.


சபரிமலை ஐயப்பன் யாத்திரை தொடர்பில் வெளியான வர்த்தமானி   ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்திருந்தார். இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெற்றதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம்  அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.இது உலக வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாவதோடு, இலங்கை, ஐயப்பன் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகனப்படுத்திய ஒரே நாடு என்று பெருமையினையும் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement