• Mar 11 2026

தெருநாய்களால் நீதிமன்றம் வந்த குடும்ப சண்டை; மனைவியால் பல கொடுமைகள்! கதறும் கணவர்

Chithra / Nov 13th 2025, 8:07 pm
image

 

தெருநாய்கள் பிரச்சினையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என தெரிவித்துள்ளார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாகக் கூறி வருகிறார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மனைவி ஒரு தெரு நாயைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை.

தொடர்ந்து அவர் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். அந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்துள்ளார். 

அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத்தோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த  நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார் எனத் தெரிவித்துள்ளார்.

மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. அயலவர்களும் அப்பெண் மீது காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்நிலையில் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தனியாக இடம்பெயர்ந்துள்ளார்.

இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தைக் காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது எனக் கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனைவிக்கு இந்திய மதிப்பில் 15 ரூபா இலட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.ஆனால் அவரது மனைவியோ தனக்கு இந்திய மதிப்பில்  2 கோடி ரூபா வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெருநாய்களால் நீதிமன்றம் வந்த குடும்ப சண்டை; மனைவியால் பல கொடுமைகள் கதறும் கணவர்  தெருநாய்கள் பிரச்சினையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாகக் கூறி வருகிறார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மனைவி ஒரு தெரு நாயைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை.தொடர்ந்து அவர் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். அந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்துள்ளார். அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத்தோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த  நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார் எனத் தெரிவித்துள்ளார்.மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. அயலவர்களும் அப்பெண் மீது காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.இந்நிலையில் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தனியாக இடம்பெயர்ந்துள்ளார்.இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தைக் காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது எனக் கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனைவிக்கு இந்திய மதிப்பில் 15 ரூபா இலட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.ஆனால் அவரது மனைவியோ தனக்கு இந்திய மதிப்பில்  2 கோடி ரூபா வேண்டும் எனக் கேட்டுள்ளார்.இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement