ராகமா பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவருடன் சேர்த்து ஐந்து நபர்களையும் ராகமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலான காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்த ராகமா பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமா போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் விசாரணைகளின் போது, பிரதான சந்தேகநபரான 27 வயதுடைய ராகமா பகுதி பெண்ணையும், 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய ராஜாங்கனை, கடுவத்தை, ராகமா மற்றும் திருகோணமலை சீனவாரை பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 2026.04.18 அன்று வெலிசர நீதவனான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன். தொடர்ந்து விசாரணைகளை ராகமா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராகமாவில் பெண்ணின் தலைமுடியை வெட்டி அராஜகம் செய்த குழுவினர் அதிரடியாகக் கைது ராகமா பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவருடன் சேர்த்து ஐந்து நபர்களையும் ராகமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமூக ஊடகங்களில் வைரலான காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்த ராகமா பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமா போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் விசாரணைகளின் போது, பிரதான சந்தேகநபரான 27 வயதுடைய ராகமா பகுதி பெண்ணையும், 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய ராஜாங்கனை, கடுவத்தை, ராகமா மற்றும் திருகோணமலை சீனவாரை பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 2026.04.18 அன்று வெலிசர நீதவனான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன். தொடர்ந்து விசாரணைகளை ராகமா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.