அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகளை தவிர்ப்பது மற்றும் செயற்றிறனை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுவரை அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது கூப்பன் முறைமையே காணப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், டொக்டர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
குறித்த கூப்பனுக்கு பதிலாக தற்போது டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த டிஜிட்டல் அட்டை மூலம் அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரச வாகனங்களுக்கு டிஜிட்டல் அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகம் அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகளை தவிர்ப்பது மற்றும் செயற்றிறனை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இதுவரை அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது கூப்பன் முறைமையே காணப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், டொக்டர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.குறித்த கூப்பனுக்கு பதிலாக தற்போது டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த டிஜிட்டல் அட்டை மூலம் அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.