கவிஞர் கனக பாரதி செந்தூரன் எழுதி, கடந்த ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற “அப்பாவின் நிலம்” சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு அண்மையில் கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நூல் வெளியீட்டுரையை கவிஞர் வேல்.லவனும், நூலுக்கான மதிப்பீட்டுரையை துணுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரனும் நிகழ்த்தினர்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முதுநிலைத் தமிழ் விரிவுரையாளரும் துறைத் தலைவருமான மா.ரூபவதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
“அப்பாவின் நிலம்” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கவிஞர் கனக பாரதி செந்தூரன் எழுதி, கடந்த ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற “அப்பாவின் நிலம்” சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு அண்மையில் கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. நூல் வெளியீட்டுரையை கவிஞர் வேல்.லவனும், நூலுக்கான மதிப்பீட்டுரையை துணுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரனும் நிகழ்த்தினர். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முதுநிலைத் தமிழ் விரிவுரையாளரும் துறைத் தலைவருமான மா.ரூபவதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.