எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார்.
வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2011 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொறிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருகின்றன.
எனவே, இன்று முதல் பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று முதல் பஸ் மற்றும் லொரி சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
அவ்வாறு செய்யாத சாரதிகள் மீது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இனி சீட் பெல்ட் அணிவது கட்டாயம்; சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார்.வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.2011 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொறிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருகின்றன.எனவே, இன்று முதல் பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இன்று முதல் பஸ் மற்றும் லொரி சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.அவ்வாறு செய்யாத சாரதிகள் மீது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.