• Aug 13 2025

இலவச காணி உறுதிகளை;காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் - பச்சிலைப்பள்ளி மக்கள் கோரிக்கை!

Thansita / Aug 12th 2025, 5:48 pm
image

தமக்கு இந்தியா - இலங்கை அரசின் இணைந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணியுடன்கூடிய வீட்டு திட்டத்தின் காணி உறுதிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் சுதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு 50 மாதிரி வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த வீட்டுத்திட்டமானது காணியுடன் வழங்கப்பட்டது. இந்தத் திட்டமானது கண்டாவளை, பொன்நகர், கிளிநொச்சி என அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கினாலும் எமது கிராமத்திற்கு வழங்கப்படவில்லை. 

நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு எமக்கு விதித்தது. இந்த விடயத்தை நாங்கள் கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ரணிலிடமும் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடவும் தெரியப்படுத்தியிருந்தோம்.

பெரும்பாலும் நாங்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றதால் பணத்தை செலுத்துவதற்கான வசதி எம்மிடம் இல்லை. வசதி படைத்து சிலர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் நாளையதினம் (13) அவர்களுக்கான காணி உறுதி வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

இந்தக் காணி எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் யாரிடமும் சென்று எமக்கு காணியை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கவில்லை. எனவே நமக்கு இலவசமாக காணி உறுதியை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

இலவச காணி உறுதிகளை;காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் - பச்சிலைப்பள்ளி மக்கள் கோரிக்கை தமக்கு இந்தியா - இலங்கை அரசின் இணைந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணியுடன்கூடிய வீட்டு திட்டத்தின் காணி உறுதிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் சுதர்ஷினி தெரிவித்துள்ளார்.இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு 50 மாதிரி வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த வீட்டுத்திட்டமானது காணியுடன் வழங்கப்பட்டது. இந்தத் திட்டமானது கண்டாவளை, பொன்நகர், கிளிநொச்சி என அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கினாலும் எமது கிராமத்திற்கு வழங்கப்படவில்லை. நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு எமக்கு விதித்தது. இந்த விடயத்தை நாங்கள் கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ரணிலிடமும் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடவும் தெரியப்படுத்தியிருந்தோம்.பெரும்பாலும் நாங்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றதால் பணத்தை செலுத்துவதற்கான வசதி எம்மிடம் இல்லை. வசதி படைத்து சிலர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் நாளையதினம் (13) அவர்களுக்கான காணி உறுதி வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.இந்தக் காணி எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் யாரிடமும் சென்று எமக்கு காணியை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கவில்லை. எனவே நமக்கு இலவசமாக காணி உறுதியை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement