• Mar 11 2026

மின்மாற்றியில் திடீரென பற்றிய தீ; மருதானையில் பதற்றம் - எவருக்கும் சேதமில்லை!

shanu / Oct 31st 2025, 2:47 pm
image

மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


திடீரென மின்மாற்றியில் தீ பற்றியதால் அந்தப் பகுதி முழுவதும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. 


 மேலும் இந்த விபத்து தொடர்பில் அருகில் இருக்கும் கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென்று மின் திறப்பாக்கி தீப்பற்றி எரிந்ததாகவும் உடனடியாக தமது வியாபார ஸ்தலங்களில் இருந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 


தொடர்ந்து இப்பகுதியில் மின் பிறப்பாக்கியுள்ள பாதையின் ஒரு பக்கமாக மின்சாரம் துண்டிப்பில் இருப்பதாக மின்சார சபை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். 


இந்த தீ விபத்து முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களோ ஆபத்துகளோ ஏற்படவில்லை என்றும், மின்பிறப்பாக்கியின் உள் பாகங்கள் முழுதாக எரிந்து போயுள்ளதாகவும் மின்சார சபை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

மின்மாற்றியில் திடீரென பற்றிய தீ; மருதானையில் பதற்றம் - எவருக்கும் சேதமில்லை மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.திடீரென மின்மாற்றியில் தீ பற்றியதால் அந்தப் பகுதி முழுவதும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.  மேலும் இந்த விபத்து தொடர்பில் அருகில் இருக்கும் கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென்று மின் திறப்பாக்கி தீப்பற்றி எரிந்ததாகவும் உடனடியாக தமது வியாபார ஸ்தலங்களில் இருந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் மின் பிறப்பாக்கியுள்ள பாதையின் ஒரு பக்கமாக மின்சாரம் துண்டிப்பில் இருப்பதாக மின்சார சபை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களோ ஆபத்துகளோ ஏற்படவில்லை என்றும், மின்பிறப்பாக்கியின் உள் பாகங்கள் முழுதாக எரிந்து போயுள்ளதாகவும் மின்சார சபை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement