கனடாவில் காரின் மீது சிறுநீர் கழித்ததைக் கண்டித்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கனடாவின் எட்மண்டன் நகரில் பதிவாகியுள்ளது.
இந்திய வம்சாவளியினர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
உணவகம் ஒன்றுக்கு வந்த இந்தியர் ஒருவர் தனது காரை தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளார். அதன்போது கனேடியர் ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இது குறித்து காரின் உரிமையாளரான இந்தியர் வினவியுள்ளார்.
எனினும் அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் குறித்த கனேடியர் காரின் உரிமையாளரின் தலையில் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவளை தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் மீது சிறுநீர் கழித்த கனேடிய பிரஜை; தட்டிக்கேட்ட இந்தியர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் கனடாவில் காரின் மீது சிறுநீர் கழித்ததைக் கண்டித்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கனடாவின் எட்மண்டன் நகரில் பதிவாகியுள்ளது. இந்திய வம்சாவளியினர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன. உணவகம் ஒன்றுக்கு வந்த இந்தியர் ஒருவர் தனது காரை தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளார். அதன்போது கனேடியர் ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து காரின் உரிமையாளரான இந்தியர் வினவியுள்ளார். எனினும் அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் குறித்த கனேடியர் காரின் உரிமையாளரின் தலையில் தாக்கியுள்ளார்.தாக்குதலுக்குள்ளானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவளை தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.