• May 24 2026

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை சந்தைக்கு விநியோகித்த மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Dec 8th 2025, 9:37 am
image


உண்பதற்கு பொறுத்தமற்ற, வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு வெளியிடும் மோசடியை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பகுதியில் இவ்வாறு வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை விற்பனை செய்த சந்தேகநபர்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத சுமார் 1,000 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலெஸ்ஸா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தொடர்பில் நாடு முழுவதும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைகளில் ஈடுபட வேண்டாம் என்று வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார். 


குறிப்பாக இந்த நேரத்தில் அரிசி வாங்கும் போது விழிப்புடன் இருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


இத்தகைய நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தங்கள் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை சந்தைக்கு விநியோகித்த மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை உண்பதற்கு பொறுத்தமற்ற, வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு வெளியிடும் மோசடியை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பகுதியில் இவ்வாறு வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை விற்பனை செய்த சந்தேகநபர்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத சுமார் 1,000 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலெஸ்ஸா தெரிவித்துள்ளார்.இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தொடர்பில் நாடு முழுவதும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைகளில் ஈடுபட வேண்டாம் என்று வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்த நேரத்தில் அரிசி வாங்கும் போது விழிப்புடன் இருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.இத்தகைய நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தங்கள் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement