• Jun 02 2026

யாழில் நகை, பணம் திருட்டுக்களுடன் நால்வர் கைது!

shanu / Apr 6th 2026, 6:49 pm
image

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள்  உள்ளிட்ட திருட்டுக்களுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில்  திருடப்பட்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான வலைகளையும் கலட்டி அம்மன் கோயில் பகுதி அருகில் உள்ள வீடுகளில் திருடப்பட்ட  மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என்பன களவாடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.


குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நான்கு பேரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.


மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

யாழில் நகை, பணம் திருட்டுக்களுடன் நால்வர் கைது யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள்  உள்ளிட்ட திருட்டுக்களுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில்  திருடப்பட்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான வலைகளையும் கலட்டி அம்மன் கோயில் பகுதி அருகில் உள்ள வீடுகளில் திருடப்பட்ட  மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என்பன களவாடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நான்கு பேரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement