• Jun 14 2025

முன்னாள் இராணுவத் தளபதி ஹாமில்டன் வனசிங்க காலமானார்..!

Sharmi / Jun 13th 2025, 8:53 am
image

நாட்டின் 11ஆவது இராணுவத் தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க காலமானார்.

இன்று காலை இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 91 வயதில் காலமானார்.

1988 மற்றும் 1991 க்கு இடையில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய அவர், 1995 இல் ஓய்வு பெற்ற பிறகு, கூட்டு நடவடிக்கைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சுடும் படையையும் ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் குடும்பத்தினரால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னாள் இராணுவத் தளபதி ஹாமில்டன் வனசிங்க காலமானார். நாட்டின் 11ஆவது இராணுவத் தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க காலமானார்.இன்று காலை இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 91 வயதில் காலமானார்.1988 மற்றும் 1991 க்கு இடையில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய அவர், 1995 இல் ஓய்வு பெற்ற பிறகு, கூட்டு நடவடிக்கைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தார்.போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சுடும் படையையும் ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்திற்கு அறிமுகப்படுத்தினார்.இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் குடும்பத்தினரால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement