• Jul 13 2026

வரலாற்றில் முதல்முறையாக நீதித்துறை அதளபாதாளத்தில் - திலித் ஜயவீர எம்.பி. எச்சரிக்கை

Chithra / Jul 13th 2026, 10:03 am
image


இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.


சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார்.


"நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும் கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது. அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம் எதிர்கொண்டுள்ளோம்." - என்று  அவர் இதன்போது குறிப்பிட்டார்.


இதேவேளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் என்ற முக்கிய பதவிக்கு ஓராண்டுக்கும் மேலாக நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாமல் இருந்தது, முறையான தலைமைத்துவமின்மையை வெளிப்படுத்துகின்றது. இதன் விளைவாகவே அப்பாவி அதிகாரிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்டுள்ளது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


வரலாற்றில் முதல்முறையாக நீதித்துறை அதளபாதாளத்தில் - திலித் ஜயவீர எம்.பி. எச்சரிக்கை இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார்."நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும் கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது. அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம் எதிர்கொண்டுள்ளோம்." - என்று  அவர் இதன்போது குறிப்பிட்டார்.இதேவேளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் என்ற முக்கிய பதவிக்கு ஓராண்டுக்கும் மேலாக நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாமல் இருந்தது, முறையான தலைமைத்துவமின்மையை வெளிப்படுத்துகின்றது. இதன் விளைவாகவே அப்பாவி அதிகாரிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்டுள்ளது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

Advertisement

Advertisement

Advertisement